அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த அ.கே.கே இந்தியாவில் Boomitra-வின் URVARA திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டது. கார்பன் கிரெடிட் பணப்பரிவர்த்தனைகள் எப்படி செயல்படுகிறது, காலாண்டு பணம் வழங்கும் முறை, தேவையான வங்கி விவரங்கள், பயனாளி (beneficiary) தேவைகள், வெஸ்டிங் (vesting), மற்றும் பணம் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் விளக்குகிறது. கூடுதல் கேள்விகள் இருந்தால், உங்கள் உள்ளூர் திட்ட கூட்டாளியை தொடர்பு கொள்ளுங்கள்.
URVARA திட்டத்திற்கு கிரெடிட்கள் வழங்கப்பட்டுவிட்டதால், அடுத்ததாக என்ன நடக்கும்?
கிரெடிட்கள் வழங்கப்பட்டதும், Boomitra அவற்றை வாங்குபவர்களுக்கு விற்பனை செய்ய தொடங்கும். விற்பனை முடிந்து பணம் வந்ததும், உங்கள் உரிமை அட்டவணை (vesting schedule) படி விவசாயிகளுக்கு பணம் பகிர்ந்து வழங்கப்படும் ( உரிமை (வெஸ்டிங்) குறித்த விவரங்களுக்கு “Vesting” பகுதியைப் பார்க்கவும்).
எனக்கு எத்தனை கிரெடிட்கள் கிடைக்கும் என்பதை என்ன தீர்மானிக்கிறது?
மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை நீங்கள் பின்பற்றியதன் விளைவாக கண்காணிப்பு காலத்தில் (monitoring period) உங்கள் மண்ணில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்பட்டது (sequestered) என்பதின் அடிப்படையில் உங்கள் கிரெடிட்கள் நிர்ணயிக்கப்படும்.
கிரெடிட் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
கிரெடிட் விலைகள் சந்தை நிலைமை மற்றும் வாங்குபவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது. கிரெடிட்களின் தரம் மற்றும் தாக்கத்தை கருத்தில் கொண்டு மிக உயர்ந்த விலையில் விற்க Boomitra முயல்கிறது.
இந்த திட்டத்தில் இருந்து எத்தனை கிரெடிட்களை நீங்கள் விற்றுவிட்டீர்கள்?
URVARA முதல் கண்காணிப்பு காலத்தின் கிரெடிட்களில் 75% க்கும் மேற்பட்டவை ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன; மீதமுள்ள கிரெடிட்களையும் விற்க
அளவிற்கும் வாங்குபவர்களைப் பெற எங்கள் விற்பனை குழு தீவிரமாக செயல்படுகின்றது.
கண்காணிப்பு காலம் (monitoring period) என்றால் என்ன?
கண்காணிப்பு காலம் என்பது—பொதுவாக 1 முதல் 5 ஆண்டுகள் வரை—உங்கள் மண் வளிமண்டலத்திலிருந்து எவ்வளவு கார்பனை நீக்கி சேமித்துள்ளது என்பதை Boomitra அளவிடும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி. அந்த காலப்பகுதியில் நடந்த அனைத்து கார்பன் மேம்பாடுகளும் ஒரு கண்காணிப்பு அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
இந்த அறிக்கை பின்னர் சுயாதீனமான மூன்றாம் தரப்பு கணக்காய்வாளரால் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு அந்த கண்காணிப்பு காலத்திற்கான கார்பன் கிரெடிட்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
கண்காணிப்பு காலத்தின் நீளம் திட்டத்தின் முறையியல் (methodology) மற்றும் கார்பன் தரநிலையின் விதிகளால் தீர்மானிக்கப்படுகிறது (URVARA திட்டத்திற்கு SocialCarbon Standard). அந்த விதிகளுக்குள் Boomitra சரியான கண்காணிப்பு காலத்தை வரையறுக்கும்.
URVARA திட்டத்தில், முதல் கண்காணிப்பு காலம் நான்கு ஆண்டுகளை கொண்டுள்ளது: 2021, 2022, 2023, மற்றும் 2024. இந்த நான்கு ஆண்டுகளிலும் ஏற்பட்ட மண் கார்பன் மேம்பாடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, திட்டத்தின் முதல் கிரெடிட்களாக வழங்கப்பட்டன.
கிரெடிட் விற்பனை முன்னேற்றத்தை நான் எப்படி கண்காணிப்பது?
Boomitra Farmer App-இல், கண்காணிப்பு காலத்திலிருந்து விற்கப்பட்ட கிரெடிட்களின் சதவீதத்தை காட்டும் எளிய முன்னேற்ற பட்டை (progress bar) காணப்படும். மேலும் கிரெடிட்கள் விற்கப்படும் போதெல்லாம், எதிர்கால பணப்பரிவர்த்தனை தொகைகள் அதிகரிக்கும்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
எந்த பணம் செலுத்தும் முறைகள் கிடைக்கின்றன?
உங்கள் சரிபார்க்கப்பட்ட (verified) வங்கி கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் (electronic transfer) மூலம் பணம் அனுப்பப்படும். ரொக்கம் (cash) மூலம் பணம் வழங்கப்படாது.
எனக்கு பணம் இந்திய ரூபாய -லா கிடைக்கும்?
ஆம். இந்திய விவசாயிகளுக்கான URVARA பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் INR (இந்திய ரூபாய்) ₹ல் வழங்கப்படும்.
பணம் பெற நான் எந்த தகவல்களை வழங்க வேண்டும்?
நீங்கள் வழங்க வேண்டியது:
- வங்கி பெயர்
- கணக்கு வைத்திருப்பவர் பெயர்
- கணக்கு எண்
- IFSC குறியீடு
- கிளை பெயர் மற்றும் முகவரி
- PAN (தேவைப்பட்டால்)
அனைத்து வங்கி தகவலும் நில உரிமை ஆவணங்களுடன் (landownership documents) ஒத்திருக்க வேண்டும்.
என் வங்கி விவரங்களை யாரிடம் கொடுக்க வேண்டும்?
அனைத்து வங்கி விவரங்களும் Boomitra Farmer App-இல் பதிவு செய்யப்படும். உங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, கேட்டுள்ள ஆவணங்களை (App) ஆப்-ல் பதிவேற்றுங்கள்.
வங்கி கணக்கு வைத்திருப்பவர் பெயர், நில உரிமையாளர் பெயருடன் ஒத்திருக்க வேண்டுமா?
ஆம். நில உரிமை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் அல்லது நிறுவனத்திற்கே பணம் செலுத்த முடியும்.
என் தகவல் சரியாக இருக்கிறதா என்பதை நான் எப்படி உறுதி செய்வது?
Boomitra Farmer App-இல் உள்நுழைந்து, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள், மற்றும் நில பதிவுகள் சரியாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
பணம் பெறுவதில் எந்த கட்டணங்கள் உள்ளனவா?
Boomitra விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் அல்லது பணப்பரிமாற்ற சேவை வழங்குநர்கள் பரிவர்த்தனை கட்டணங்களை விதிக்கலாம். அந்த கட்டணங்கள் உங்கள் வங்கியால் நிர்ணயிக்கப்படும்; இவை Boomitra-வின் கட்டுப்பாட்டிற்கு வெளியானவை. சந்தேகம் இருந்தால் உங்கள் வங்கியை அணுகுங்கள்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
எனக்கு பணம் எப்போது கிடைக்கும்?
Boomitra கார்பன் கிரெடிட்களை வாங்குபவருக்கு விற்று, அந்த கிரெடிட்களுக்கான பணம் பெற்ற பிறகே விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். விவசாயிகளுக்கான பணப்பரிவர்த்தனைகள் காலாண்டு அடிப்படையில் (quarterly) செய்யப்படும் — Boomitra வாங்குபவரிடமிருந்து பணம் பெறும் நேரத்தைப் பொறுத்து:
- ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை விற்கப்பட்டு பணம் பெறப்பட்ட கிரெடிட்கள் — ஏப்ரல் 30க்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
- ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை — ஜூலை 31க்குள்
- ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை — அக்டோபர் 31க்குள்
- அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை — அடுத்த ஆண்டின் ஜனவரி 31க்குள்
காலாண்டு பணப்பரிவர்த்தனை சுழற்சி தொடங்கும்போது என் வங்கி விவரம் சரிபார்க்கப்படவில்லை என்றால்?
ஆப்-ல் உங்கள் கணக்கு சரிபார்க்கப்படாமல் இருந்தால், உங்கள் பணம் அடுத்த காலாண்டிற்கு மாற்றப்படும்.
நான் வங்கி கணக்கை மாற்றினால் என்ன செய்ய வேண்டும்?
பணம் செயலாக்கப்படுவதற்கு முன் உள்ள ஒரு வார காலத்தில் நீங்கள் கணக்கு விவரங்களை புதுப்பித்தால், அந்த மாற்றம் நடப்பு காலாண்டிற்கு அல்ல; அடுத்த காலாண்டு பணப்பரிவர்த்தனை முதல் மட்டுமே செயல்படுத்தப்படும்.
பணம் வர இருக்கிறதா என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் பணம் தொடங்கப்பட்டதும் (initiated) Boomitra Farmer App-இல் அறிவிப்பு (notification) வரும்.
எனக்கு பணம் வரவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
தயவுசெய்து சரிபார்க்கவும்:
- ஆப்-இல் உள்ள உங்கள் வங்கி விவரங்கள் சரியாக உள்ளனவா?
- உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டுள்ளதா (verified)?
எல்லாம் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால், உங்கள் உள்ளூர் திட்ட கூட்டாளி அல்லது, Boomitra தொழில்நுட்ப குழுவை (support) தொடர்பு கொள்ளுங்கள்.
தவறு ஏற்பட்டால் பணம் திரும்பப் பெறப்படுமா அல்லது திருத்தப்படுமா?
தவறு ஏற்பட்டால் உடனடியாக உங்கள் புல அலுவலர்/பிரதிநிதியை தொடர்பு கொள்ளுங்கள். வங்கி செயலாக்க விதிகளைப் பொறுத்து திருத்தங்கள் சாத்தியம்.
இந்த காலாண்டில் எனக்கு ஏன் பணம் வரவில்லை?
கீழ்க்காணும் காரணங்களில் ஏதேனும் ஒன்றினால் நடப்பு காலத்திற்கு பணம் வராமல் இருக்கலாம்:
- உங்கள் வங்கி/பணம் விவரங்கள் முழுமையல்ல, தவறாக உள்ளது, அல்லது பணம் செயலாக்க தேதி முன் ஒரு வாரத்துக்குள் புதுப்பிக்கப்பட்டது
- உங்கள் அடையாள சரிபார்ப்பு அல்லது பண்ணை தகவல் இன்னும் பரிசீலனையில் உள்ளது
- உங்கள் வங்கி பணப்பரிமாற்றத்தை நிராகரித்தது அல்லது தாமதப்படுத்தியது
- முந்தைய காலப்பகுதியில் எந்த கிரெடிட் விற்பனையும் முடிவடையவில்லை
- சமீபத்திய கண்காணிப்பு காலத்தின் கிரெடிட்கள் இன்னும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பில் உள்ளதால் விற்பனைக்கு கிடைக்கவில்லை
- உதாரணம்: முதல் கண்காணிப்பு காலத்தின் கிரெடிட்களுக்கு பணப்பரிவர்த்தனைகள் முடிந்திருக்கலாம். அடுத்த கண்காணிப்பு காலத்தின் பணம், சரிபார்ப்பு முடிந்து கிரெடிட்கள் விற்கப்பட்ட பிறகே வழங்கப்படும்.
காலத்தின் பணம், சரிபார்ப்பு முடிந்து கிரெடிட்கள் விற்கப்பட்ட பிறகே வழங்கப்படும்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
வெஸ்டிங் அட்டவணை என்றால் என்ன?
உங்கள் பங்கேற்பு ஒப்பந்தத்தில் உள்ள வெஸ்டிங் அட்டவணை படி பணம் காலப்போக்கில் பகிர்ந்து வழங்கப்படும். இது நீண்டகால நில பராமரிப்பை (land stewardship) ஆதரிக்கிறது மற்றும் கார்பன் கிரெடிட்கள் விற்கப்படும் நேரத்துடன் ஒத்துப்போக உதவுகிறது.

Boomitra ஏன் வெஸ்டிங்கை பயன்படுத்துகிறீர்கள்?
வெஸ்டிங் திட்டம், நேர்மையை (integrity) உறுதி செய்யவும், தொடர்ந்த கண்காணிப்பை ஆதரிக்கவும், மற்றும் கிரெடிட் விற்பனை நேரத்துடன் பணப்பரிவர்த்தனையை ஒத்திசைக்கவும் உதவுகிறது.
என் பணம் பற்றிய விவரம்/பிரிவு எனக்கு கிடைக்குமா?
ஆம். Boomitra Farmer App-இல் உங்கள் பணப்பரிவர்த்தனையின் விவரங்கள் காட்டப்படும் — எத்தனை கிரெடிட்கள் விற்கப்பட்டன, நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பதையும் உட்பட.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
எனக்கு வங்கி கணக்கை மாற்ற வேண்டும். என்ன செய்ய வேண்டும்?
Boomitra Farmer App-இல் புதிய வங்கி விவரங்களை புதுப்பித்து, சரிபார்ப்புக்காக சமர்ப்பியுங்கள்.
சரியான பணம் செயலாக்க நேரத்தில் (processing window) மாற்றம் செய்தால், உங்கள் பணம் அடுத்த சுழற்சியில் வழங்கப்படும்.
விவசாயி இறந்துவிட்டால் என்ன நடக்கும்?
பங்கேற்ற விவசாயி இறந்தால், Boomitra கேட்கும் ஆவணங்கள்:
- மரணச் சான்றிதழின் நகல், மற்றும்
- சட்ட வாரிசு அல்லது அடுத்த உறவினரின் சரிபார்க்கப்பட்ட விவரங்கள்
ஆவணங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு, வரவிருக்கும் அல்லது நிலுவையிலுள்ள பணங்கள் குறிப்பிடப்பட்ட பயனாளிக்கு மாற்றப்படும்.
விவசாயிகளுக்குப் பதிலாக கூட்டாளிகள் பணம் பெற முடியுமா?
இல்லை. நில உரிமையாளர் அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பயனாளியின் சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கு மட்டுமே நேரடியாக பணம் செலுத்த முடியும்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
கார்பன் கிரெடிட் வருமானத்திற்கு நான் வரி செலுத்த வேண்டுமா?
இந்தியாவில் கார்பன் கிரெடிட் வருமானம் பொதுவாக வரிக்குட்பட்ட வருமானமாக கருதப்படலாம். தயவுசெய்து உள்ளூர் வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.
வரி தாக்கலுக்கான ஆவணங்களை Boomitra வழங்குமா?
Boomitra தேவையானபோது பணப்பதிவுகளை வழங்கும். அவை கிடைக்கத் தொடங்கிய பிறகு உங்கள் Farmer App-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
எனக்கு கேள்விகள் இருந்தால் யாரை தொடர்பு கொள்ளலாம்?
உங்கள் உள்ளூர் புல அலுவலர்/பிரதிநிதியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது Farmer App-இல் செய்தி அனுப்புங்கள்.
Boomitra தொடர்ந்து என்னுடன் பணியாற்றுமா?
ஆம். Boomitra நீண்டகால கூட்டாண்மைக்கு உறுதி பூண்டுள்ளது; எதிர்கால திட்ட சுழற்சிகளிலும் புதிய வாய்ப்புகளிலும் தொடர்ந்து ஆதரிக்கும்.
NO RESULT FOUND
We could not find what you searched for.
Try searching again
